நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆற்றங்கரையில் இருந்த பெரியவர் ஒருவரிடம், 'நான் ஆண்டவரை காண விரும்புகிறேன். அதற்கு என்ன செய்யலாம்?' எனக் கேட்டான் ஒரு இளைஞன்.
உடனே அவனை சட்டென இழுத்து ஆற்று வெள்ளத்திற்குள் மூழ்கடித்தார். சற்று நேரத்தில் தண்ணீருக்குள் இருந்து இழுத்து வந்து கரையில் படுக்கச் செய்தார். அப்போது அவனிடம், 'ஆற்றுக்குள் மூழ்கடித்த போது என்ன நினைத்தாய்' எனக் கேட்டார்.
'உயிர் வாழ வேண்டும். அதற்காக எப்படியாவது சுவாசிக்க வேண்டும் என விரும்பினேன்' என்றான்.
''இதே மனநிலை இருந்தால் ஆண்டவரை உன்னால் காண முடியும்'' என்றார் பெரியவர்.

