ADDED : ஆக 08, 2025 08:00 AM

ரோம் நகரில் துறவி ஒருவர் இருந்தார். அவர் கை வைத்தால் எப்படிப்பட்ட நோயும் குணமாகும்.
வெகுதுாரத்தில் இருந்து ஒரு பெண், இதைக் கேள்விப்பட்டு தனக்கு இருந்த கொடிய நோயைக் குணப்படுத்த விரும்பினாள். பல நாளாக பயணித்து ரோமாபுரியை அடைந்தாள். தற்செயலாக துறவியும், அந்த பெண்ணும் ஓரிடத்தில் சந்தித்தனர்.
''ஐயா... இங்குள்ள துறவி ஒருவரின் கை நம் மீது பட்டால் தீராத நோயும் தீரும் எனக் கேள்விப்பட்டேன்'' என்றாள். நீ தேடி வந்த துறவி நான் தான் என அவர் சொல்ல விரும்பவில்லை.
''பார்ப்பதற்கு நல்லவளாகத் தெரிகிறாய். ஆனால் அந்த துறவி எப்படிப்பட்டவர் எனத் தெரியாது. இப்போதே பாதுகாப்பாக திரும்பிச் செல்'' எனக் கூறி அவளின் தலையில் கை வைத்து ஆசியளித்தார்
அந்த நபர். நோய் நீங்கியதோடு உற்சாகம், பலம் பெற்றவளாக மாறினாள் அந்த பெண்.
உண்மை துறவி புகழை விரும்புவதில்லை.
