நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடிகர் ஒருவர் முக்கிய விஷயம் பற்றி நண்பர்களுடன் ஆலோசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜப்தி உத்தரவுடன் வந்த ஊழியர், ''சார்... உங்க வீடு ஜப்திக்கு வந்துருச்சு. உடனே காலி செய்யணும். நீதிமன்ற உத்தரவு' என்றார். அதற்கு இரண்டு மணி நேரம் அவகாசம் கொடுங்கள் என்றார் நடிகர். ஊழியர் சம்மதிக்க, வீட்டுப் பணியாளரிடம், 'இவருக்கு சாப்பாடு கொடு'' என்றார் நடிகர். 'ஜப்தி ஆர்டர் வந்தும் பதட்டப்படாமல் இருக்கிறாயே' என நண்பர் கேட்டதற்கு 'இப்போ பதட்டப்பட்டு என்னாகப் போகுது... நிதானமாக யோசிச்சா ஏதாவது வழி பிறக்கும்' என்றார் நடிகர். நிதானமாக இரு. வெற்றி பெறுவாய் என்கிறது பைபிள்.

