ADDED : நவ 27, 2025 11:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிரேக்க ஞானி ஸோலோன் அழுகிய பழத்தைக் காட்டி, '' யாராவது இதை புதிதாக உருவாக்க முடியுமா...'' எனக் கேட்டார்.
'உருவாக்க முடியாது. குப்பையில் போடுங்கள்'' என்றனர்.
'இதுதான் உங்கள் பதிலா...'' எனக் கேட்டதற்கு அனைவரும் அமைதியாக இருந்தனர்.
பழத்தை துண்டாக வெட்டி, அதிலுள்ள விதைகளை எடுத்தார். இந்த பழத்தை புதிதாக உருவாக்க இந்த விதைகளை நல்ல நிலத்தில் விதையுங்கள்.
இந்த அழுகிய பழம் போலவே சிலர் ஊழலில் ஈடுபட்டு சமுதாயத்தை கெடுக்கிறார்கள். அவர்களிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வேண்டுமானால்
இன்று விதையாக இருக்கும் குழந்தைகளுக்கு நல்ல பண்புகளை கற்றுக் கொடுங்கள் என்றார் ஞானி.

