இங்கிலாந்தைச் சேர்ந்த கவிஞர் ஜான் மில்டன். சிறுவனாக இருந்த போதே கவிதை எழுதுவார். ஆனால் படித்து முடித்த பின் அரசியலில் ஈடுபட்டார். இங்கிலாந்தின் வெளியுறவு அமைச்சராக இருந்தார்.
35 வயதில் திருமணம் செய்து கொண்ட மில்டனுக்கு அவர் வயதில் நேர் பாதியான இளம்பெண்(17) கிடைத்தாள். ஆனால் ஒரே மாதத்தில் பிரிந்தனர். அந்தக் காலத்தில் விவாகரத்து என்பதே கிடையாது.
ஆனாலும் மில்டன் நீதிமன்றத்தில் மனைவி மீது வழக்கு தொடுத்தார். விவாகரத்தை ஆதரித்து புத்தகம் எழுதினார். அதனால் மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்தது. நீண்ட காலத்திற்குப் பின் அவரைத் தேடி மனைவி வந்தாள். ஆனால் அவளுடன் குடும்பம் நடத்திய நிலையில் சில மாதத்தில் இறந்தாள். மீண்டும் ஒரு திருமணம் செய்தார். பின்னாளில் பார்வையை இழந்தார். இவரது கவிதைகள் ஐந்து உண்மைகளை உணர்த்துகின்றன.
* உன்னை நீயே அறிந்து கொள்.
* கல்வியின் அவசியத்தை உணர்ந்திடு.
* உண்மை, நீதிக்காக போராடு.
* சுதந்திரம், உரிமைக்காக வாதிடு.
* ஆண்டவரை அறிய முயற்சி செய்.

