
சாலையில் உள்ள சிக்னலின் முன் நாளிதழை விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். அப்போது சிக்னலுக்காக காத்திருந்த பணக்காரர் ஒருவர் நாளிதழை வாங்குவதற்காக தன் காரின் கண்ணாடியை இறக்கினார். அதற்குள் கிரீன் சிக்னல் விழவே, நாளிதழை இலவசமாக கொடுத்தார் விற்பனையாளர்.
இதே சூழல் அந்த பணக்காரருக்கு இரண்டாவது முறையும் நடந்தது. அப்போதும் நாளிதழை இலவசமாக பெற்றார். ஆண்டுகள் ஓடின. அயராத உழைப்பால் அவர் கோடீஸ்வரர் ஆனார். இலவசமாக நாளிதழ் கொடுத்த நபரை சந்திக்க ஆசைப்பட்டார். அவரைக் கண்டுபிடித்து, 'என்னை ஞாபகம் இருக்கா' எனக் கேட்டார். 'நன்றாக ஞாபகம் இருக்கிறது' என்றார் விற்பனையாளர்.
'முன்பு ஒருமுறை இலவசமாக நாளிதழ் கொடுத்தீரே...'' என்றார் பணக்காரர். 'ஒருமுறை அல்ல... இரு முறை கொடுத்தேன்' என்றார் விற்பனையாளர். 'தங்களுக்கு தேவைப்படும் உதவியைச் செய்ய நான் காத்திருக்கிறேன். என்ன வேண்டும் உங்களுக்கு'' எனக் கேட்டார்.
''உங்களின் அன்புக்கு நன்றி. அந்தஸ்து உள்ள நீங்கள் இது பற்றி வெளியே சொல்லாதீர்கள்'' என்றார் விற்பனையாளர். ''பணத்தையே சிந்திக்கும் நான் கோடீஸ்வரன் அல்ல; நீங்கள் தான் கோடீஸ்வரர்'' என்றார். அவர் தான் அமெரிக்க கோடீஸ்வரரான பில்கேட்ஸ்.

