
புவிஈர்ப்பு விசையை கண்டுபிடித்தவர் விஞ்ஞானி ஐசக் நியூட்டன். ஒருநாள் அவரது வீட்டில் இருந்து ஆய்வுக் கூடத்திற்கு உணவு வந்தது. அதை சாப்பிடக் கூட நேரம் இல்லாமல் ஆய்வில் கவனம் செலுத்தினார். அந்த நேரத்தில் அவரைக் காண நண்பர் ஒருவர் வந்தார். 'சற்று பொறுங்கள். ஐந்து நிமிடத்தில் வந்து விடுகிறேன்' என சொல்லி விட்டு உள்ளே போனவர் வருவதாக தெரியவில்லை. வந்த நண்பருக்கோ பசி கிள்ளியது.
அங்கிருந்த உணவைச் சாப்பிட்டு பாத்திரத்தை கழுவி வைத்தார். இனி காத்திருப்பதால் பயனில்லை எனக் கருதி வீட்டுக்கு நடையைக் கட்டினார். நீண்ட நேரத்திற்கு பின் அறையை விட்டு வெளியே வந்தார் நியூட்டன். காலி பாத்திரத்தை பார்த்து விட்டு, 'சாப்பிட்டுத் தான் ஆய்வில் ஈடுபட்டுள்ளேன் போலிருக்கிறதே' என சிரித்தபடி புறப்பட்டார். தொழிலில் ஈடுபாடு இருந்தால் பசி, தாகம், துக்கம், துாக்கம் எதுவும் நெருங்காது என்பதற்கு இது உதாரணம்.

