
ஆசிரியர்
கண்டித்ததால் டேனியல் சோகமாக இருந்தான். அவனைத் தேடி வந்த கிறிஸ்டோபர்,
'டேய்... கவலைப்படாதே... சர்ச்சுக்கு போகலாம். கிறிஸ்மஸ் வருதே' என
அழைத்தான். அங்கு விளக்கு ஒளியில் சர்ச்சும், கிறிஸ்துமஸ் மரமும்,
குடிலும் பார்க்க அழகாக இருந்தன. அருகிலிருந்த ஒருவர் அவர்களுக்கு கேக்,
சாக்லேட் கொடுத்தார். அந்த சந்தோஷத்தில் கவலையை மறந்தான் டேனியல். கேக்கை
சாப்பிட்டுக் கொண்டே, ''அங்கிள். கிறிஸ்மஸ் எப்போ ஆரம்பிச்சது'' எனக்
கேட்டான்.
அதற்கு அவர், ''இயேசுவின் பிறந்த நாளே கிறிஸ்துமஸ். முன்பு
டிச.25 அன்று ரோம் நாட்டில் மக்கள் ஒன்று கூடி விருந்துண்டு, பரிசுகள்
கொடுத்து மகிழ்வர்.
அப்போதைய மன்னர் கான்ஸ்டன்ட் இந்த நாளை
கிறிஸ்துவின் பிறந்த நாளாக கொண்டாடும்படி வேண்டுகோள் விடுத்தார். பின்னர்
350ல் போப் ஜூலியஸ் இந்நாளை கொண்டாடும்படி அறிவித்தார். இப்படி உருவானது
தான் கிறிஸ்துமஸ்'' என்றார்.

