தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அன்பு செலுத்து

அன்பு செலுத்து

அன்பு செலுத்து


ADDED : டிச 25, 2025 08:45 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெண்ணுக்கு படிப்பு எதற்கு என சொன்ன பெற்றோரையும் மீறி ஜெர்மனியில் படித்தார் பிளாரன்ஸ் நைட்டிங்கேல். பின் லண்டனில் நர்சாக பணியாற்றினார். 'மற்றவர் மீது அன்பு செலுத்து, உன் வாழ்நாள் குறைவு' என்ற வசனத்தை முழுமையாக நம்புபவர் இவர்.

1854 - 56 ல் இங்கிலாந்திற்கும், ரஷ்யாவிற்கும் நடந்த போரில் வீரர்கள் பலர் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதற்காக சேவை எண்ணம் கொண்ட பலரை தேடினர் ராணுவ அதிகாரிகள். அதற்கு தலைமையேற்க சரியானவர் நைட்டிங்கேல் என முடிவு செய்தனர்.

அவரது தன்னம்பிக்கையும், மருத்துவ சேவையும் வீரர்களுக்கு ஆறுதலாக இருந்தன. பலரும் விரைவில் குணம் அடைந்தனர். இரவில் கையில் விளக்கு ஏந்தியபடி மற்றவர் துாங்கி விட்டார்களா என பார்ப்பது இவரது வழக்கம். இதனால் இவரை 'விளக்கேந்திய நங்கை, கைவிளக்கு ஏந்திய காரிகை, விளக்கு ஏந்திய சீமாட்டி' என அழைத்தனர்.

'அன்பு செலுத்து; வாழ்நாள் குறைவு; விரைந்து சேவை செய்' என்பது இவரது பொன்மொழி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us