தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தேன் பாய்ந்தது

தேன் பாய்ந்தது

தேன் பாய்ந்தது


ADDED : டிச 25, 2025 08:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 25, 2025 08:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரியவர் ஒருவர் ஜன்னல் ஓரத்தில் படுத்திருந்தார். அவருக்கு பார்வை சரிவர தெரியாது. அருகில் அவரது மனைவி புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். பேரன் ராபர்ட் அலைபேசியில் கேம் விளையாடியபடி இருந்தான். அலட்சிய புத்தி கொண்ட அவன் எதையும் பொருட்படுத்துவதில்லை.

ஜன்னல் ஓரத்தில் பறவை ஒன்று வந்தது.

'ராபர்ட்... அது என்ன' எனக் கேட்டார் அவர். திரும்பிப் பார்த்த சிறுவன் 'காகம்' என்றான்.

சிறிது நேரத்தில் அவர் மீண்டும் அதே கேள்வியைக் கேட்க... அவன் பதில் சொன்னான். மூன்றாவது முறையாக கேட்ட போது 'அது காகம் எனச் சொன்னேனே... தாத்தா... ஒரு தரம் சொன்னா புரியாதா' எனக் கத்தினான்.

இதை கவனித்த பாட்டி டைரி ஒன்றை எடுத்து வந்தாள். அதில் தாத்தா எழுதிய குறிப்பை படித்துக் காட்டினாள். 'வீட்டு முற்றத்தில் நின்றிருந்த பறவையைக் காட்டி, 'இது என்ன தாத்தா' எனக் கேட்டான் என் பேரன் ராபர்ட். அவனுக்கு பத்து முறை 'காகம்' என சந்தோஷமாக பதிலளித்தேன். காரணம் அவனது மழலைப்பேச்சு. அதைக் கேட்க கேட்க காதில் தேன் பாய்ந்தது என எழுதியிருந்தது.

பெற்றோரை கண் கலங்காமல் பாதுகாப்பவரே ஆண்டவரின் அன்புக்குரியவர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us