பள்ளி வளாகத்தில் ரவுண்ட்ஸ் வந்தார் தலைமையாசிரியை அமலா. மாணவர்கள் அமலாவைக் கண்டதும் கப்சிப் ஆயினர். அவர்களிடம் 'ஆசிரியர் இல்லையா' எனக் கேட்டதற்கு , 'தமிழ் ஆசிரியை வரவில்லை' என்றாள் ஒரு மாணவி. 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறாய்' என்னும் தலைப்பில் மாணவர்களை கட்டுரை எழுதச் சொல்லிய பின் வகுப்பறையில் அமர்ந்தார். அனைவரும் எழுத ஆரம்பித்தனர்.
ஜூலி என்ற மாணவி மட்டும் இறுக்கமாக இருந்தாள். அவளிடம் அமலா காரணம் கேட்டார். 'என் அம்மாவின் இறப்பு, அப்பாவின் மறுமணம், சித்தியிடம் வேலைக்காரியாக தான் மாறியது, தங்கையை பொருட்படுத்தாத அண்ணன் என பல காரணங்களால் மனம் சோர்ந்து விட்டது. என்ன எழுதுவது எனத் தெரியாமல் தவிக்கிறேன்' என்றாள். அதைக் கேட்ட தலைமையாசிரியை 'கவலைப்படாதே... சாதிக்கப் பிறந்தவள் நீ. சோதனையை சாதனையாக மாற்று' எனச் சொன்னார்.
'எதிர்காலத்தில் நான் மனநல ஆலோசகராக பணியாற்றுவேன். என்னை போல வாடுவோரின் துன்பத்தை போக்க உதவுவேன்' என்ற குறிக்கோளுடன் எழுத ஆரம்பித்தாள் ஜூலி.

