பெற்றோர் எங்கு தேடியும் கிடைக்காத 10 வயது சிறுமி ரபியா ஒரு கொடுமைக்காரியிடம் சிக்கினாள். வீட்டு வேலைகள் எல்லாம் செய்யச் சொல்லி அவள் கட்டாயப்படுத்தினாள். மாட்டுத் தொழுவத்தை சுத்தம் செய்யும்படி நெருக்கடி கொடுத்தாள். அதையும் மறுக்காமல் செய்தாள் சிறுமி. இரவில் தொழுவத்தின் ஓரத்தில் படுக்கச் செய்தாள். இப்படியே ஒரு வாரம் கடந்தது.
ஒருநாள் இரவு மாட்டுத் தொழுவத்திற்கு வந்தாள் கொடுமைக்காரி. அப்போது இருட்டில் முணுமுணுப்பு சத்தம் கேட்டது. மறைவாக நின்ற போது பிரார்த்தனை செய்து கொண்டிருந்தாள் சிறுமி. 'ஆண்டவரே, எனக்கு வேலை கொடுக்கும் இவருக்கு நீரே நல்ல புத்தி தருவாயாக. அவரும், அவரது குடும்பத்தாரும் நலமுடன் வாழ அருள்புரிவீராக' என்றாள்.
தீமை செய்பவருக்கும் நன்மை செய்த ரபியா மீது அவளுக்கு இரக்கம் வந்தது. மனம் திருந்திய அவள் கண்ணீருடன் சிறுமியைக் கட்டி அணைத்தாள்.

