
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சலவை தொழிலாளி ஒருவரிடம் இரண்டு கழுதை இருந்தது. இரண்டும் சேர்ந்தே எங்கும் செல்லும்.
காரணம் ஒரு கழுதைக்கு கண் தெரியாது என்பதால் இன்னொரு கழுதையின் கழுத்தில் கட்டப்பட்ட மணிச் சத்தத்தை வைத்து அதை தொடர்ந்து செல்லும். முன்னால் செல்லும் கழுதையும் நண்பன் வருவதை உறுதிப்படுத்த அடிக்கடி திரும்பி பார்க்கும். சில நேரத்தில் வருவதற்கு தாமதமானால் நின்று அழைத்துச் செல்லும். மனிதர்களில் பலர் இந்த கழுதையைப் போல குறையுள்ளவர்களாக உள்ளனர். அவர்கள் தங்களை விட புத்திசாலிகளின் அறிவுரையை கேட்பதும், அவர்களின் வழிகாட்டுதலை பின்பற்றுவதும் நல்லது.

