ADDED : பிப் 12, 2026 10:41 AM
மகனின் திருமணத்தின் போது ஆண்டவர் வருவதற்காக ஜெபம் செய்தார் ஆபிரகாம். திருமண மண்டபத்திலும், உணவு அருந்தும் இடத்திலும் குறிப்பிட்ட இடத்தை அவருக்காக ஒதுக்கினார். அங்கு வேறு யாரும் உட்கார கூடாது என தன் பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். ஆனால் ஆண்டவர் வரவில்லை.
விருந்தும் முடிந்தது. கடைசியாக ஏழைகளுக்கு உணவளிக்க ஆரம்பித்தனர். சாப்பிடும் இடத்தில் குறிப்பிட்ட இடத்தில் யாரும் உட்காராமல் பணியாளர்கள் பார்த்துக் கொண்டனர். அதையும் மீறி ஒரு சிறுவன் அங்கு உட்கார்ந்து விட்டான். இதைப் பார்த்த பணியாளர், அவன் கையைப் பிடித்து இழுத்தார். அப்போது ஆபிரகாம், ''அவனை அனுமதியுங்கள்'' என்றார். அவனும் வயிறார சாப்பிட்டான். அவனிடம் ''நீ யார்?'' எனக் கேட்டார் ஆபிரகாம்.
'மரியாளின் மகன்' என சிரித்தபடியே ஓடி விட்டான். ஏழைகளுக்கு உதவுதல் என்பது ஆண்டவருக்கு செய்யும் உதவி என ஆபிரகாமின் உள்ளுணர்வு உணர்த்தியது.
