தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ஒரே கண்ணோட்டம்

ஒரே கண்ணோட்டம்

ஒரே கண்ணோட்டம்


ADDED : பிப் 12, 2026 11:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆபிரகாமின் வீட்டுக்கு ஏழை வழிப்போக்கன் ஒருவன் வந்தான். ஆபிரகாம் அவனுக்கு உணவு கொடுத்தார். அதை வைத்ததும் வேகமாக கையில் எடுத்து சாப்பிட துடித்தான். ஆபிரகாமுக்கு கோபம் வந்தது.

''முட்டாளாக இருக்கிறாயே! சாப்பிடும் முன் அதை கொடுத்ததற்கு நன்றி சொல்ல வேண்டாமா?” எனக் கத்தினார். உனக்கு உணவு தர முடியாது எனச் சொல்லி வெளியேற்றினார்.

அன்றிரவு மனசாட்சி உறுத்தியது. நீண்ட நேரம் கழித்தே துாக்கம் வந்தது. கனவில், “ஆபிரகாமே! இப்படி நீ செய்யலாமா? உன்னால் துரத்தப்பட்டு சென்றானே ஒரு வழிப்போக்கன். கடந்த ஐம்பது ஆண்டாக இப்படித்தான் நன்றி இல்லாமல் சாப்பிடுகிறான். ஆனாலும் திருந்துவான் என பொறுமையுடன் ஆண்டவராகிய நான் இருக்கிறேன். ஆனால் அவனைப் பார்த்த முதல் நாளிலேயே துரத்தி விட்டாயே. உலகில் நல்லவரும், கெட்டவரும் இருக்கத் தான் செய்வார்கள். அவர்களுக்காக சூரியனும், நிலாவும் ஒளி தரவில்லையா... மழை பெய்யவில்லையா... இரு வேறு துருவமாக இருக்கும் மனிதர்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us