ADDED : பிப் 19, 2026 01:52 PM
தொழிற்சாலையில் பணியாற்றுபவர்களில் நேர்மையானவரை தேர்வு செய்ய விரும்பினார் முதலாளி. அதற்காக அவர்களிடம், 'இங்குள்ள விதைகளை ஆளுக்கு ஒன்றாக எடுத்துச் செல்லுங்கள். மூன்று மாதம் கழித்து வளர்ந்த செடியை என்னிடம் காட்டுங்கள். பரிசு உங்களுக்காக காத்திருக்கிறது'' என்றார்.
மூன்று மாதம் கழிந்தது. பணியாளர்களில் ஒருவரான மைக்கேலைத் தவிர மற்றவர்கள் பூச்செடிகளை கொண்டு வந்தனர். அதில் இருந்த பூக்களை காட்டி மகிழ்ந்தனர். 'மைக்கேல்... நீ மட்டும் செடியை வளர்க்கவில்லையா'' எனக் கேட்டார். அதற்கு, '' காய்ந்து போன விதையை நீங்கள் கொடுத்தீர்கள். அதில் எப்படி செடி வளரும்'' எனக் கேட்டான்.
அதற்கு முதலாளி, ''உண்மை தான். நீங்கள் எடுத்துச் சென்ற விதை எல்லாம் காய்ந்து போனவை. தெரிந்தே தான் கொடுத்தேன். என்னை திருப்திபடுத்த வேறு செடியை மற்றவர்கள் கொண்டு வந்தீர்கள். நேர்மையான மைக்கேலுக்கு என் வாழ்த்துக்கள்'' என சொன்னதோடு, அவனை தொழிலாளர்களின் தலைவனாக நியமித்தார்.
