ADDED : பிப் 19, 2026 01:53 PM

அ நிறம் | அளவு
மழை பெய்யல. கண்மாயிலும் தண்ணீர் இல்ல. பக்கத்து நிலத்துக்காரரும் தண்ணீர் தரல... என்ன செய்வதென தெரியாமல் தவித்தான் டேவிட். நிலத்தில் கிணறு தோண்ட முடிவு செய்தான். பத்தடி தோண்டினான்.
தண்ணீர் கிடைக்கவில்லை. பிறகு வேறொரு இடத்தில் 15 அடி தோண்டினான். அதிலும் பயனில்லை. மற்றொரு இடத்தில் 20 அடி தோண்டினான் அதிலும் அப்படியே. சோர்ந்து போன அவன், மனைவியிடம் விஷயத்தை சொன்னான்.
புத்திசாலியான அவள், 'போனது போகட்டும். ஒரே இடத்தில் தோண்டுங்கள்' என்றாள். டேவிட்டுக்கு புத்தி வந்தது. முயற்சியில் ஈடுபட்டான். ஒரே இடத்தில் தோண்டினான். முப்பது அடியில் தண்ணீர் ஊற்றெடுத்தது. அந்தக் கிணறு வற்றவே இல்லை. தாகமாய் இருப்பவருக்கு தண்ணீர் போல உதவுங்கள்.
