ADDED : பிப் 19, 2026 02:43 PM
அ நிறம் | அளவு
நுாறாண்டுக்கு முன் நடந்த சம்பவம் இது.
பொய் சொல்லாதே; அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாதே என அடிக்கடி அறிவுரை சொல்வாள் அம்மா. அதை சிந்தித்தபடி நடந்தான் ஒரு சிறுவன். இப்படியே கிராமத்தில் இருந்து நடந்தே லண்டன் நகரை அடைந்தான். வேலை தேடி அலைந்தான்.
பசியால் வாடிய அவனைக் கண்ட ஒரு நிறுவனத்தின் மேலாளர் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். கண்ணும் கருத்துமாக பணியைச் செய்தான். அவனது நேர்மையை உணர்ந்த மேலாளர் அவனை படிக்க வைத்தார். இளைஞரான பின் நிறுவனத்தின் பங்குதாரராக ஆனான். படிப்படியாக வளர்ச்சி அடைந்த இளைஞன் ஒரு கட்டத்தில் அரசியலில் ஈடுபட்டான். லண்டனின் மேயராக தேர்வு செய்யப்பட்டான்.
உழைப்பால் உயர்ந்த அந்த சிறுவன் யார் தெரியுமா...
சர் ஜார்ஜ் ஆல்வின்.
