தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/ரோல் மாடல்

ரோல் மாடல்

ரோல் மாடல்


ADDED : பிப் 19, 2026 02:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 02:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களில் டேனியலும் ஒருவர். அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கினார் மாவட்ட ஆட்சியர்.

விரக்தியுடன் பெற்றுக் கொண்ட டேனியலின் மனைவி, ''உன் அப்பாவின் உழைப்பால் கிடைக்காத பணம் இப்போது இறப்பால் கிடைத்துள்ளது'' எனச் சொல்லி அழுதாள். அதற்கு மகள் ஆஷா, '' அம்மா! இந்த பணம் நமக்கு வேண்டாம்.

அதே சமயத்தில் அப்பாவை போல சாராயம் குடிப்பவர்களை திருத்த இதை பயன்படுத்துவோம். அதற்கான ஏற்பாட்டை செய்ய நீங்கள் என்னுடன் வாருங்கள்'' எனச் சொல்லி தன்னுடைய பள்ளிக்கு தாயுடன் சென்றாள்.

அங்கு தலைமை ஆசிரியையிடம், '' என் தந்தையாரின் நினைவாக இந்த பத்து லட்ச ரூபாயை அன்பளிப்பாக தருகிறோம். வங்கியில் சேமித்து பெறும் வட்டியில் ஆண்டு தோறும் மதுவால் ஏற்படும் கேடு பற்றி விழிப்புணர்வை உண்டாக்கி மாணவர்களுக்கு போட்டி நடத்தி பரிசளியுங்கள்'' என காசோலையை ஒப்படைத்தாள்.

தந்தையை இழந்த நிலையிலும் பொது நலனில் அக்கறை கொண்ட ஆஷா ரோல் மாடல் ஆகி விட்டாள் என பாராட்டினார் தலைமை ஆசிரியை. துக்கத்தை மறந்த தாயும் மகளை எண்ணி பெருமிதம் கொண்டாள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us