நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒருமுறை நாயீன் என்ற ஊரின் வழியாக சென்று கொண்டிருந்தார் இயேசு. அங்கு கணவரை இழந்த ஒரு பெண் அழுதபடி நின்றிருந்தாள். அருகில் அவளுடைய ஒரே மகன் பிணமாகக் கிடந்தான். ஏழைத்தாயின் துன்பத்தைப் போக்க எண்ணிய ஆண்டவர் அந்த சிறுவனைத் தொட்டார்.
வானில் இருந்து தேவ ஒளி அவனுடைய உடம்புக்குள் புகுந்தது. துாங்கி எழுந்தவனைப் போல கண் விழித்தான். வியப்பில் ஆழ்ந்த தாய் தன் மகனை கட்டித் தழுவினாள். இந்த அதிசயத்தைக் கண்ட அனைவரும் மகிழ்ந்தனர்.

