ADDED : மார் 05, 2026 09:00 AM

குற்றத்தில் ஈடுபட்ட மதத்தலைவர், வழக்கறிஞர், விஞ்ஞானி மூவருக்கும் மின்சாரத்தை உடலில் செலுத்தி கொல்லப்பட வேண்டும் என நீதிமன்றம் தண்டனை விதித்தது.
அதற்கு முன்பாக மதத்தலைவரிடம், 'கடைசியாக ஏதாவது சொல்ல விரும்புகிறீரா' எனக் கேட்டனர்.
அதற்கு 'ஆண்டவர் என்னைக் காப்பாற்றுவார்' என்றார்.
மின்சாரம் பொருத்தப்பட்ட சேரில் அமர்த்தப்பட்டார். ஆனால் மின்சாரம் பாயவில்லை. அவர் உயிர் தப்பினார்.
இரண்டாவதாக வழக்கறிஞரிடம், 'ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா' எனக் கேட்டதற்கு 'நீதிக்கு அழிவில்லை' என்றார். அவர் மீதும் மின்சாரம் பாயவில்லை. அவரும் உயிர் பிழைத்தார்.
மூன்றாவதாக விஞ்ஞானியை கொல்லத் தயாராயினர். மின்சாரம் தடைபட்டதை அவர் புரிந்து கொண்டார். 'கடைசியாக எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா' எனக் கேட்டதற்கு, 'மின் இணைப்பை சரி செய்யுங்கள். அதில் மின்சாரம் பாயவில்லை' என்றார். உடனடியாக மின்இணைப்பு சரிசெய்யப்பட்டது. அவருக்கு மரண தண்டனை நிறைவேறியது. பல நேரங்களில் பேசுவதைக் காட்டிலும் மவுனம் நல்லது.
