ADDED : மார் 05, 2026 09:03 AM

உவமை கதையின் மூலம் மனிதனின் இயல்பு பற்றிச் சொல்கிறார் இயேசு.
விவசாயி ஒருவர் விதைப்பதற்காக வயலுக்குச் சென்றார். அவர் செல்லும் வழியில் பாதையின் ஓரம், பாறை, முள்புதர், வயல் என ஆங்காங்கே பல இடங்களில் விதைகள் விழுந்தன.
பாதையில் விழுந்த விதைகளை பறவைகள் கொத்திச் சென்றன.
பாறையில் விழுந்த விதைகள் வேர் விட வழியின்றி கருகின.
முட்புதரில் விழுந்த விதைகள் வளர முள்செடிகள் தடையாக இருந்தன.
நிலத்தில் விழுந்த விதையோ முளைத்து பல மடங்கு விளைச்சலைத் தந்தன.
மனிதர்களின் மனநிலையும் இந்த நான்கு வகையில் அடங்கும். இங்கு விதை என்பது உபதேசம் அல்லது நல்ல கருத்துக்களை குறிக்கும். அவற்றை வாழ்வில் பின்பற்றும் மனிதன் வயலில் விழுந்த விதையாக பலமடங்கு நன்மை அடைவான். இல்லாவிட்டால் மற்ற இடங்களில் விழுந்த விதையைப் போல வாழ்வை வீணாக்குவான்.
