ADDED : மார் 19, 2026 01:58 PM
அ நிறம் | அளவு
சிறு வயதில் இருந்தே ஓவியம் வரைவதில் ஈடுபாடு கொண்டவர் ராபர்ட் ரிப்ளே. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது இவர் படம் வரைந்து கொண்டிருந்தார்.
அதைக் கண்ட ஆசிரியர் கோபத்தில் தண்டித்தாலும் அவருடைய திறமையை உணர்ந்தார். ' நான் கொடுத்த வீட்டுப் பாடங்களுக்கு ஏற்ப அதையே ஓவியாக வரைந்து கொண்டு வா' என ஊக்கப்படுத்தினார். அதன் பின் முழுமையான ஈடுபாட்டால் ஓவியராக மாறினார். பிற்காலத்தில் கலைத்திறமைக்காக 197 நாடுகளுக்கு பயணம் செய்தார்.
திறமையை பாராட்டி உற்சாகப்படுத்துபவனே உண்மையான ரசிகன்.
