தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நெத்தியடி

நெத்தியடி

நெத்தியடி


ADDED : மார் 19, 2026 02:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 02:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

1608ல் பிறந்து 1674 வரை வாழ்ந்தவர் மில்டன். கல்லுாரியில் படிக்கும் போதே கவிதைகள் எழுதினார். 29ம் வயதில் இவர் எழுதிய 'லிஸிடாஸ்' என்னும் கவிதைக்கு பின் மக்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

அந்த கால கட்டத்தில் தான் இங்கிலாந்தில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது. இதன் பின் அரசியல் கட்டுரைகளை எழுதினார். அதன் பின் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. அரசியல் ஈடுபாட்டால் ஓய்வு எடுக்காமலும், சத்தான உணவு சாப்பிடாததாலும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அத்துடன் பார்வை குறைபாட்டால் அவதிப்பட்டார். ஆனாலும் மனம் தளரவில்லை.

மனைவி, மகளின் உதவியுடன் 55ம் வயதில் 'பாரடைஸ் லாஸ்ட்' என்ற புகழ்மிக்க நாவலை எழுதினார். சொர்க்கத்தில் இருந்த ஆதாம், ஏவாளின் மனதை சாத்தான் எப்படி கெடுத்தான் என்பதே இதன் சாராம்சம். இதன் பின் இவரது பெருமைக்கு களங்கம் விளைவிக்க எண்ணி எதிரிகள் உடல்குறையைச் சொல்லி கேலி பேசினர். அதற்கு நெத்தியடியாக, 'என் கண்கள் மட்டுமே பார்க்கும் சக்தியை இழந்துள்ளன. ஆனால் சிலருக்கு ஐம்புலன்களுக்கு ஆதாரமான மனமே செயலற்று போனது.

பொருளின் வண்ணம், வடிவத்தை பார்க்க இயலாதவனாக நான் இருக்கிறேன். அதன் உண்மை தன்மையை என்னால் உணர முடியும். கீழ்த்தரமான அவர்களை விட நான் மேலானவன். பார்க்கும் திறன் இருந்தும் பிறருக்கு கெடுதல் செய்பவனே உண்மையில் பார்வை இல்லாதவன்' என்றார் மில்டன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us