ADDED : மார் 19, 2026 02:41 PM
அறிவியல் ஆராய்ச்சி பற்றி பேச ஒரு கல்லுாரிக்கு காரில் புறப்பட்டார் விஞ்ஞானி ஐன்ஸ்டீன். இடைவிடாத பணி பளுவால் களைப்படைந்த அவர் டிரைவரிடம் வருத்தப்பட்டார்.
அதற்கு அவர், ''நீங்கள் ஓய்வாக இருங்கள். உங்களுடைய பேச்சை பல முறை கேட்டுள்ளேன். இப்போது செல்லும் இடமோ நமக்கு புதிய இடம். அங்கு உள்ளவர்கள் தங்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.
தங்களுக்காக அங்கு நான் உரையாற்றுகிறேன். நான் பேசுவது சரியா என ஒரு பார்வையாளராக கவனியுங்கள்'' என்றார் டிரைவர்.
அவரும் சம்மதித்தார். 'ஐன்ஸ்டீன்' போல நடித்துக் கொண்டு கல்லுாரி அரங்கத்திற்குள் நுழைந்தார் டிரைவர்.
டிரைவரின் பேச்சும் சரியாக இருந்தது. கடைசி நேரத்தில் பேராசிரியர் ஒருவர் சிக்கலான கேள்வி ஒன்றை கேட்டார். பதில் தெரியாத டிரைவர் சுதாரித்துக் கொண்டார்.
'இந்த சாதாரண கேள்விக்கு இங்கிருக்கும் என் டிரைவரே பதில் சொல்லுவார்' என பார்வையாளராக இருந்த ஐன்ஸ்டீனை சுட்டிக் காட்டினார். புத்திசாலியான டிரைவரை எண்ணி மகிழ்ந்த ஐன்ஸ்டின் கேள்விக்கு விளக்கம் அளித்தார்.
