தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/நறுமணம்

நறுமணம்

நறுமணம்


ADDED : மார் 19, 2026 02:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 19, 2026 02:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தர்சிங். அமெரிக்க பிரஸ்பைடிரியன் மிஷன் பள்ளியில் படித்த போது புதிய ஏற்பாடு பாடமாக இருந்தது. அத்தனையும் பொய் எனச் சொல்லி அதை எரித்தார். பதினான்கு வயதில் தாயார் காலமானார். அவரது மறைவு வெறுமையை உண்டாக்கியது. அமைதி தேடி அலைந்தார்.

முதலில் கிறிஸ்தவத்தை எதிர்த்த அவர், பின்னர் நற்செய்தியில் நம்பிக்கை கொண்டார். உடைமைகளை துறந்து சாலையே வீடாக்கி கொண்டார். எதிரிகள் இவரை சித்ரவதை செய்து பாழும் கிணற்றுக்குள் தள்ளினர். ஆனால் எதிரிக்கும் நல்ல புத்தியை தரும்படி பிரார்த்தனை செய்தார். அப்போது இருட்டில், “உன் முன்புள்ள கயிற்றை கெட்டியாக பிடி” எனக் குரல் ஒலித்தது. கயிறை பிடித்தபடி கிணற்றை விட்டு வெளியேறினார்.

விஷம் வைத்து, சிறையில் அடைத்து, கல்லெறிந்து கொல்லவும் திட்டமிட்டனர். ஆனாலும் உயிர் பிழைத்தார். சாது சுந்தர்சிங் எனப்பட்ட இவர் பல இடங்களுக்கும் நடந்தே ஊழியம் செய்தார். நீண்ட துாரம் நடந்ததால், ''ரத்தக்கசிவு கால்களைக் கொண்ட அப்போஸ்தலன்'' எனப்பட்டார்.

தன்னை வெட்டும் கோடாரிக்கும் நறுமணம் தரும் சந்தன மரம் போல, நல்லவர் பிறருக்கு தீங்கு செய்வதில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us