ADDED : மார் 26, 2026 12:32 PM
மண்ணில் பிறந்த அனைவரும் மரணம் அடைந்தாக வேண்டும்.
“ஒரு தரம் மரிப்பதும், பின்பு நியாயத் தீர்ப்பை அடைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டுள்ளது” என்கிறது பைபிள்.
நீண்ட காலம் வாழ வேண்டும் என்பதற்காக தங்களின் குழந்தைக்கு 'நித்தியன்' என பெயரிட்டனர் ஒரு தம்பதியினர். 'நித்தியன்' என்றால் 'நிரந்தரமானவன்'. அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவன் ஆனான். தன் பெயருக்கேற்ப நிரந்தரமாக வாழ ஆசைப்பட்டான். பெரியவர் ஒருவரிடம் ஆலோசித்த போது, “இது சாதாரண விஷயம். இதோ என் குதிரையை விலைக்கு வாங்கிக் கொள். இதை விட்டு நீ இறங்கக் கூடாது. குதிரையில் இருக்கும் வரை உனக்கு மரணம் இல்லை” என்றார் அவர்.
நித்தியனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. பெரியவர் கேட்டதையும் விட அதிக விலைக்கு குதிரையை வாங்கினான்.
அனைத்து வேலைகளையும் குதிரையில் இருந்தபடியே செய்தான். இப்படியே நீண்ட காலம் ஓடியது.
ஒரு மழை காலத்தில் வண்டி ஒன்று சேற்றில் சிக்கிக் கொண்டது. அந்த வழியாக குதிரை மீது நித்தியன் வந்த போது, அவனிடம் வண்டிக்காரன் உதவி கேட்டான். குதிரையில் அமர்ந்தபடியே காலால் சக்கரத்தைத் தள்ளினான் நித்தியன். சகதியில் பட்டதும் கால் வழுக்கியது. தடுமாறி கீழே விழுந்த நித்தியனின் உயிர் பிரிந்தது.
எப்போது வேண்டுமானாலும் மரணம் வரலாம். அதை ஏற்கும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும்.
