தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/யாருக்கு ஓட்டு

யாருக்கு ஓட்டு

யாருக்கு ஓட்டு


ADDED : ஏப் 15, 2026 08:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 15, 2026 08:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

'யாருக்கு ஓட்டு' என முடிவு செய்ய நாட்டாமையை எதிர்பார்த்து ஆலமரத்தின் அடியில் ஒரு கிராம மக்கள் கூடியிருந்தனர். அப்போது அவரின் உதவியாளர், 'நாட்டாமை வர்றார்' எனக் குரல் கொடுத்தபடி வந்தார். அனைவரும் எழுந்து நின்றனர்.

'வர்ற தேர்தல்ல யாருக்கு ஓட்டு போடணும் என முடிவு செய்வதற்காக இங்கே கூடி இருக்கோம்' என்றார் கூட்டத்தில் இருந்த ஒருவர். அதை கேட்ட இளைஞன் ஒருவன், 'நல்லாத்தான் சொல்றீங்க... ஆனா நம் ஊரில காசு வாங்கிட்டுல ஓட்டு போடுறீங்க. அது எப்படி உண்மையான ஆட்சியா இருக்கும்' எனக் கேட்டான்.

உடனே நாட்டாமை உரத்த குரலில், ''ஓட்டு போடுவது நமது கடமை. அதற்கு பணமோ, பொருளோ வாங்கக் கூடாது. மீறினால் ஊரை விட்டு தள்ளி வைச்சிடுவேன். நம்ம ஊருக்கு நல்லது செய்றவங்க மட்டும் தான் ஆட்சிக்கு வரணும்.

நம்ம கிராமத்தைச் சுத்தி பல ஏக்கர் நிலம் தரிசா கிடக்கு. கண்மாய், குளம் எல்லாம் புதராக இருக்கு. நாமும் நம்மால் முடிந்தவரை மராமத்து செய்தோம். அதிகாரிகளுக்கு மனுவும் கொடுத்தோம். உண்ணாவிரதமும் இருந்தாச்சு. ஆனா ஒன்னும் நடக்கல. இந்த தேர்தலிலாவது நல்ல வழி கிடைக்கும் என நம்புவோம். நல்லவரே நாட்டை ஆள வேண்டும். அவருக்கே நம் ஓட்டு'' என்றார் நாட்டாமை. எல்லோரும் கைதட்டினர்.

''நல்லவருக்கே ஓட்டு; ஓட்டுக்கு பணம் வாங்க மாட்டோம்'' என கோஷமிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us