ADDED : ஏப் 15, 2026 08:53 AM
அ நிறம் | அளவு
அமெரிக்காவின் பாஸ்டனைச் சேர்ந்தவர் கவிஞர் எமர்சன். பாதிரியாரின் மகனான இவர், எட்டு வயதில் தந்தையை இழந்தார். மதச் சொற்பொழிவாளராக பணியாற்றினார். சர்ச் நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அங்கிருந்து விலகினார்.
இது பற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர் தாமஸ் கார்லிடம் ஆலோசனை செய்தார். பின்னர் அமெரிக்காவுக்கு திரும்பிய இவர் மாசசூசெட்சில் குடியேறினார். கல்லுாரி ஒன்றில் பேராசிரியர்
ஆனார். இவர் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற அறிவுரை இதோ...
* பழமையை பாழ்படுத்தாமல் புதுமையை உருவாக்கு.
* தன்னம்பிக்கையுடன் வாழ்.
* இயற்கையோடு வாழ்.
* தனித்தன்மையுடன் பணியாற்று.
* எதிர்காலத்தைச் சிந்தித்து செயல்படு.
