ADDED : ஏப் 23, 2026 12:29 PM

அ நிறம் | அளவு
ஊர் ஊராகச் சென்று பாடும் இசைக்குழு ஒன்று இருந்தது.
அதன் ஆரம்ப காலம் முதலே பாடிக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர். அவரால்
பெருமை அடைந்தது இசைக்குழு. அவருக்கென நிறைய ரசிகர்கள் இருந்தனர்.
ஆனால்
குழுவின் மேலாளர் அவரிடம், 'வயதாகி விட்டதால் நீங்கள் இனி பாட வேண்டாம்.
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்'' என்றார். 'இதுவும் நன்மைக்கே' என
நினைத்த பெரியவர் சம்மதித்தார்.
அன்றிரவு மேலாளரின் கனவில் தோன்றிய
நீதிதேவதை, 'என் அருமை மகனே! அந்த பெரியவர் உள்ளத்தால் உயர்ந்த மனிதர்.
அவர் தொடர்ந்து பாடட்டும். இது ஆண்டவன் கட்டளை' என்றது. தவறை உணர்ந்த
மேலாளர் அவரை பாட அழைத்தார்.
'உள்ளத்தை பார். உதட்டை பார்க்காதே'.
