தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/விசுவாசம்

விசுவாசம்

விசுவாசம்


ADDED : மே 07, 2026 09:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 07, 2026 09:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பணக்காரர் ஒருவரின் வீட்டில் பலர் வேலை பார்த்தனர். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே, அவர்களுக்கு குறிப்பிட்ட தொகையை கொடுத்து பிழைத்துக் கொள்ளச் சொன்னார் பணக்காரர்.

ஆனால் படிக்காத ஒருவன் அவரிடம் விசுவாசமாக இருந்தான். அதனால் அவரிடமே இருக்க விரும்பினான்.

திடீரென ஒருநாள் அவனைக் காணவில்லை. அன்றாட தேவைக்கு கூட சிரமப்பட்டார் பணக்காரர். இரண்டு நாள் கழித்து அவன் திரும்பி வந்தான்.

அவனைக் கண்டதும் 'எங்கு சென்றாய். வேலை எல்லாம் அப்படியே கிடக்கிறதே' என திட்டினார் பணக்காரர். பொறுமையாக கேட்ட அவன், 'என் மகன் இறந்து விட்டான். அதை தங்களிடம் சொல்ல வந்த போது நீங்கள் நன்றாக துாங்கிக் கொண்டிருந்தீர்கள். அதனால் சொல்லாமல் சென்று விட்டேன்' என்றான்.

துக்கத்திலும் தன் துாக்கம் கெடக் கூடாது என எண்ணிய வேலைக்காரனைக் கண்டு அவர் நெகிழ்ந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us