ADDED : மே 14, 2026 12:24 PM
அ நிறம் | அளவு
பள்ளி மாணவி அமலி தேர்வில் தோல்வி அடைந்தாள். விஷயம் அறிந்த அவளின் தந்தை ஆப்ரகாம், 'உனக்கு செல்லம் கொடுத்ததால் வந்த பிரச்னை இது. இருந்தாலும் உன் மீது நம்பிக்கை இருக்கு' என்றார்.
அமலியின் கண்களில் கண்ணீர். தன் மீது தந்தை வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என நினைத்தாள். அலைபேசியை அறவே புறக்கணித்தாள். தோழியருடன் பொழுது போக்குவதை நிறுத்தினாள். அக்கறையுடன் பாடங்களை படிக்கத் தொடங்கினாள். புரியாத பாடத்தை ஆசிரியர், அம்மாவிடம் கேட்டு தெரிந்து கொண்டாள். மகளின் மனமாற்றத்தைக் கண்ட தந்தை மகிழ்ச்சி அடைந்தார்.
