ADDED : ஜூலை 02, 2026 10:50 AM
பள்ளி மாணவனாக இருந்த போதே அறிவியலை ஆர்வமாக படித்தான் ஒரு சிறுவன். பட்டப்படிப்பு முடிந்ததும் ஆராய்ச்சியில் ஈடுபட்டான். விரைவிலேயே விஞ்ஞானி ஆனான். இதற்கிடையில் திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்தன.
நீண்ட காலம் கழித்து ஆராய்ச்சியில் வெற்றி கிடைத்தது. நிருபர்கள் பேட்டி கேட்ட போது, 'என் ஆராய்ச்சி முடிவை அங்கீகரித்த அரசாங்கத்திற்கு நன்றிகள். என் நீண்ட கால உழைப்புக்கு வெற்றி கிடைத்துள்ளது. அதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்' என்றார்.
அருகில் இருந்த அவருடைய மனைவியிடம் கேட்டதற்கு, 'ஆராய்ச்சியில் வெற்றி பெற்ற என் கணவர், குடும்ப வாழ்வில் தோல்வி அடைந்து விட்டார். ஒருநாள்கூட என்னிடம் அன்பாக பேசியதில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து எங்கும் சென்றதில்லை' என்றாள்.
குடும்பத்தினரை நேசியுங்கள். மனைவி, குழந்தைகளின் உணர்வுகளை மதியுங்கள் என்கிறது பைபிள்.
