ADDED : ஜூலை 02, 2026 10:51 AM
அ நிறம் | அளவு
இயேசுவின் சீடரான யோவானிடம் சீடராக இருந்தவர் பாலிக் கார்ப். போதகரான இவரை ரோமானிய வீரர்கள் கைது செய்ய வந்தனர். அப்போதும் பதட்டம் இல்லாமல் அவர்களுக்கு உணவளித்து உபசரித்தார். கொஞ்ச நேரம் அவகாசம் கேட்டு ஜெபிக்கத் தொடங்கினார்.
கைது செய்யப்பட்டு ரோமானிய ஆளுநரின் முன்னர் நிறுத்தப்பட்டார். ''ரோமானிய மன்னரின் பெயருக்கு ஆணையிட்டு வணக்கம் செலுத்தினால் உடனே விடுதலை கிடைக்கும்'' என்றார் ஆளுநர். அதற்கு பாலி கார்ப், ''நீண்ட காலமாக ஊழியத்தில் ஈடுபட்டுள்ளேன். என்னை மீட்ட ஆண்டவரை மறக்க முடியுமா...'' எனக் கேட்டார். அதைக் கேட்ட ஆளுநர், 'ஆணி அடித்து கொல்லப்படுவீர்கள்' என எச்சரித்தார். 'என் மனதில் ஆண்டவர் இருக்கும் போது நான் ஏன் பயப்பட வேண்டும்?' என துணிச்சலுடன் சொன்னார்.
அதை கேட்ட ஆளுநர் அதிர்ச்சி அடைந்தார்.
