ADDED : ஜூலை 02, 2026 10:51 AM

இஸ்ரேலில் உள்ள கிராமங்களை 'கிட்பூட்ஸ்' என்கின்றனர். எபிரேய மொழியில் 'ஒன்று சேர்தல்' என பொருள். இந்த கிராமம் ஒவ்வொன்றிலும் மக்கள் தொகை 1000. விவசாயம், நவீன தொழில்களில் கூட்டுமுயற்சியுடன் மக்கள் ஈடுபட்டனர்.
'திறமைக்கேற்ப உழைப்பு, தேவைக்கேற்ப பலன்' என்ற தத்துவம் இதன் பின்னணியாக இருந்தது. 1910ல் முதன் முதலாக டெகானியா என்ற கிட்பூட்ஸ் உருவாக்கப்பட்டது. விவசாயம், தொழிலின் மூலம் கிடைக்கும் வருமானம் பொதுநிதியில் சேர்க்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கேற்ப பிரித்து தரப்பட்டது.
கல்வி, மருத்துவம், குழந்தை பராமரிப்பு, பொழுதுபோக்கு வசதிகள் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்பட்டது. தற்போது இஸ்ரேல் முழுவதும் 270 கிட்பூட்ஸ் கிராமங்கள் உள்ளன. இந்த நிர்வாகத்தின் குறிக்கோள் மக்கள் அனைவரும் பரந்த மனப்பான்மையுடன் வாழ வேண்டும் என்பதே.
