தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தாழ்த்திக் கொள்

தாழ்த்திக் கொள்

தாழ்த்திக் கொள்


ADDED : ஜூலை 09, 2026 10:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2026 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

யூத மதத்தின் சட்டங்களை கடைப்பிடிப்பவன் பரிசேயன். அரசு வரிகளை வசூலிப்பவன் ஆயக்காரன். இவர்கள் இருவரும் ஒருமுறை ஜெபத்தில் ஈடுபட்டனர்.

'நான் மற்றவர்களைப் போல பணத்திற்கு ஆசைப்பட்டவன் அல்ல. அநியாயம் செய்பவன் அல்ல. விபச்சாரம் செய்பவன் அல்ல. வரி வசூல் செய்யும் ஆயக்காரனைப் போல கடுமையானவனும் அல்ல. வாரத்திற்கு இரண்டு முறை உபவாசம் இருக்கிறேன். என் வருமானத்தில் பத்தில் ஒரு பங்கை ஆலயத்திற்கு காணிக்கையாக கொடுக்கிறேன்'' என தற்பெருமையுடன் ஜெபம் செய்தான் பரிசேயன்.

ஆயக்காரனோ ஆலயத்தின் கடைசி வரிசையில் நின்றிருந்தான். தன் கண்களால் நிமிர்ந்து பார்க்க துணிச்சல் அவனுக்கு இல்லை. நெஞ்சில் அடித்தபடி, 'பாவியாகிய என் மீது அன்பாக இரும்' என அழுதபடி ஜெபம் செய்தான்.

இவர்களில் யார் நீதிமான் எனச் சீடர்களிடம் கேட்டார் இயேசு. அனைவரும் அமைதியாக இருந்தனர். அன்புடன் தன்னை தாழ்த்திக் கொண்டவனே நீதிமான் என்றார். அன்பை மட்டுமே அவர் விரும்புகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us