ADDED : ஜூலை 09, 2026 10:27 AM
அ நிறம் | அளவு
வணிகன் ஒருவன் மாசிடோனிய மன்னர் பிலிப்பிடம் தன்னுடைய அரேபிய குதிரையை விற்பதற்காக கொண்டு வந்தான். அது ஓரிடத்தில் நிற்காமல் காலில் புழுதியை கிளப்பி திமிறியது. அப்போது வீரர்களிடம், 'இக்குதிரையை அடக்க முடியுமா'' எனக் கேட்டார் மன்னர்.
அதைக் கேட்டதும் அங்கிருந்த மன்னரின் மகன், ''அப்பா... இந்த குதிரையை அடக்குகிறேன்'' என்றான். குதிரை அதனுடைய நிழலைப் பார்த்து மிரள்வதை கவனித்த சிறுவன், கிழக்கு நோக்கி குதிரையைச் செலுத்தினான். அவனுடைய சாமர்த்தியத்தால் அது அடங்கியது.
அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... மாவீரனான அலெக்சாண்டர்.
