ADDED : ஜூலை 09, 2026 10:28 AM

அ நிறம் | அளவு
ஏழை ஒருவன் நண்பர்களின் உதவியுடன் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்தான். அவனுடைய பேச்சு மக்களுக்கு ஆறுதலாக இருந்தது. எதிர்பார்ப்பு இல்லாமல் அன்புடன் சேவை செய்தான்.
அதே ஊரைச் சேர்ந்த பணக்காரர் ஒருவர் ஆதரவற்றவர்களுக்கு உணவளித்து வந்தார். ஒருமுறை அவர் ஏழையிடம், “மக்களுக்கு பல உதவிகளை நான் செய்கிறேன்.
ஆனால் நீயோ நண்பர்களின் உதவியுடன் சிலருக்கு மட்டும் உணவளிக்கிறாய். இதில் யாருடைய சேவை உயர்ந்தது?” என தற்பெருமையுடன் கேட்டார்.
அதற்கு ஏழை, ''எதையும் எதிர்பார்த்து நான் உதவி செய்யவில்லை. அன்பால் செய்யும் சிறு உதவியையும் ஆண்டவர் பெரிதாக ஏற்பார்'' என்றான்.
புகழ், தற்பெருமை எண்ணம் இல்லாமல் செய்யும் சேவையே உண்மையான ஊழியம்.
