தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/பாராட்டு

பாராட்டு

பாராட்டு


ADDED : ஜூலை 16, 2026 11:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறுவன் ஸ்டீபன் தன் தாத்தாவிடம், 'நாட்டில் அட்டூழியம் அதிகமாவதற்கு காரணம் அரசியல்வாதிகளா... அல்லது அவர்களை தேர்ந்தெடுக்கும் மக்களா... மாற்றம் எங்கிருந்து வர வேண்டும்' எனக் கேட்டான்.

அந்த நேரத்தில் மாடிப்படியை மேலே இருந்து சுத்தம் செய்தபடியே இறங்கினார் வேலைக்காரர். அவரிடம், 'கீழ் படியில் இருந்து மேல் நோக்கி சுத்தம் செய்ய முடியுமா...' எனக் கேட்டார் தாத்தா.

அதற்கு அவரோ, 'மேலிருந்து கீழ் நோக்கி வருவது தான் எளிதான வழி'' என்றார்.

பேரனை உற்றுப் பார்த்தார் தாத்தா. அப்போது அவன், ''நல்லா புரியுது தாத்தா... மேலிருந்து தான் மாற்றம் வர வேண்டும். அரசியல்வாதிகள் நேர்மையுடன் நடந்தால் அதை மக்களும் பின்பற்றுவர் அப்படித்தானே தாத்தா'' என்றான்.

'அடடா... புத்திசாலி ஆயிட்டியே' என பாராட்டினார் தாத்தா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us