ADDED : ஜூலை 16, 2026 11:10 AM

அ நிறம் | அளவு
இங்கிலாந்தைச் சேர்ந்த ஜார்ஜ் முல்லர் அனாதை குழந்தைகளுக்காக ஆசிரமம் நடத்தினார். ஒருநாள் அதன் மேலாளர் குழந்தைகளின் உணவுக்கு தேவையான பொருளோ, பணமோ கைவசம் இல்லை என வருத்தப்பட்டார்.
அதைக் கேட்ட ஜார்ஜ் சிறிதும் கவலைப்படவில்லை. இரவு துாங்கச் செல்லும் முன், 'ஆண்டவரே... இக்கட்டான நிலையில் என்னை விட்டு விடாதீர்கள். குழந்தைகளுக்கு உணவளிப்பது உம் கடமை. எஜமானன் நீயே. நான் உன் வேலைக்காரன் மட்டுமே' என நம்பிக்கையுடன் ஜெபம் செய்தார். ஒரு பேக்கரி உரிமையாளரின் கனவில் தோன்றினார் ஆண்டவர். அனாதை குழந்தைகளுக்கு உடனடியாக ரொட்டி வழங்கும்படி உத்தரவிட்டார். அதைச் செய்ததோடு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருள்களையும் அவர் நன்கொடை அளித்தார்.
