ADDED : ஜூலை 16, 2026 11:21 AM
அ நிறம் | அளவு
அமெரிக்கா மாசசூசெட்ஸில் பிறந்தவர் டி.எல்.மூடி. வறுமையில் வாடிய இவர் சிகாகோ சென்று தொழிலில் ஈடுபட்டார். நாளடைவில் பைபிளில் ஈர்ப்பு ஏற்படவே தொழிலைக் கைவிட்டார். முழுநேர ஊழியராக பணியில் இறங்கினார். லண்டன், அமெரிக்கா முழுவதும் கூட்டங்களை நடத்தினார். தேவாலயம், பைபிள் நிறுவனத்தை மூடி நிறுவினார்.
ஆண்டவரின் அன்பு, இரக்கம், மன்னிப்பு பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்லி பிரசங்கம் செய்தார். படிப்பறிவு இல்லாததால் இவருடைய பேச்சை பலர் கிண்டல் செய்தனர். ஆனால் அவர் வருந்தவில்லை. 'நம்பிக்கை இருந்தால் அனைத்தும் சாத்தியம். அன்பு அனைத்தையும் எளிதாக்கும்' எனச் சொல்லி அர்ப்பணிப்புடன் பணியில் ஈடுபட்டார்.
மக்கள் சேவை செய்வதற்கு படிப்போ, பணமோ முக்கியம் அல்ல.
