தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/தேடி வரும் உதவி

தேடி வரும் உதவி

தேடி வரும் உதவி


ADDED : ஜூலை 23, 2026 08:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 08:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஜெனிபர் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டாள். இரக்க குணம் கொண்ட அவள், வாசலில் நின்ற செக்யூரிட்டியிடம் தன்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை கொடுத்தாள். மழை வேகம் எடுத்தது. பஸ் ஸ்டாண்டுக்கு அருகில் வந்த போது, காலையில் வீட்டில் கிளம்பும் போது குடையை எடுக்க மறக்காதே என அம்மா சொன்னது ஞாபகத்திற்கு வந்தது.

அவளை கண்ட பக்கத்துவீட்டு தாத்தா, 'கருக்கல் நேரமா இருக்கும்மா... காலிப்பசங்க வம்பு பண்ணுவாங்க. மழையில நிக்காம சீக்கிரமா வீட்டுக்குப் போம்மா' எனச் சொல்லி தன்னிடம் இருந்த குடையை கொடுத்தார். திடுக்கிட்ட அவள், 'உங்களுக்கு வேண்டாமா தாத்தா...' எனக் கேட்டாள்.

புன்னகைத்தபடி, 'நான் வெளியூருக்கு செல்ல பஸ் ஸ்டாண்டுக்கு வந்தேம்மா. இனி குடை தேவையில்ல. பஸ்சில ஏறி உட்காரப் போறேன்'' என்றார். தாத்தாவுக்கு நன்றி சொல்லிய ஜெனிபர், குடையை அவருடைய வீட்டில் கொடுப்பதாக சொல்லி நிம்மதியாக நடந்தாள். நல்லவரை தேடி ஆண்டவரின் அன்புக்கரம் நீளும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us