ADDED : ஜூலை 23, 2026 09:02 AM
அ நிறம் | அளவு
நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர் அமெரிக்க எழுத்தாளர் மோரிஸ் குட்மேன். இவருடைய 36வது வயதில் விமான விபத்தில் சிக்கினார். சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ''எலும்புகள் நொறுங்கியதால் எழுந்து நடப்பது சிரமம் தான்'' என தெரிவித்தனர்.
பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதியின் மீது நம்பிக்கை கொண்ட இவர் அதை பொருட்படுத்தவில்லை. மனதிற்குள், ''நான் விரைவில் குணம் பெறுவேன். என்னால் எழுந்து நடக்க முடியும்'' என எப்போதும் சொல்லி வந்தார். அதன்படியே ஆரோக்கியமான மனிதராக மீண்டும் எழுந்து நடந்தார்.
'மனிதன் எப்படி சிந்திக்கிறானோ அப்படியே ஆகிறான்' என்பதே உலகிற்கு நான் சொல்லும் செய்தி என்றார் குட்மேன். நம்பிக்கையுடன் செயல்படும் அனைவரும் நல்ல மனிதன் (குட்மேன்) தான்.
