தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/டிக்கெட் எங்கே...

டிக்கெட் எங்கே...

டிக்கெட் எங்கே...


ADDED : ஜூலை 30, 2026 07:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 30, 2026 07:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அடிக்கடி ஞாபக மறதியால் சிரமப்பட்டார். அப்படிபட்ட சம்பவம் ஒன்று உங்களுக்காக...

ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார் ஐன்ஸ்டீன். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்த போது 'எங்கு டிக்கெட் வைத்தேன் என தெரியவில்லையே' என்றார் ஐன்ஸ்டீன். அதற்கு பரிசோதகர், ''நீங்கள் டிக்கெட் வாங்கி இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும், அதை தேட வேண்டாம்'' என்றார்.

ஆனாலும் இவர் தேடுவதை நிறுத்தவில்லை.

'தங்களின் மீது நம்பிக்கை இருக்கிறது என நான் சொல்லி விட்டேனே' என்றார் பரிசோதகர். அதற்கு ஐன்ஸ்டீன், சொன்ன பதில் தான் வேடிக்கையானது. 'டிக்கெட் கிடைக்காவிட்டால் நான் எந்த ஊரில் இறங்க வேண்டும் என எப்படி தெரியும்?' என்றார் கவலையுடன்.

பக்கத்தில் இருந்த பயணி ஒருவர், 'நான் இறங்கும் ஊரில் தான் வழக்கமாக இவரும் இறங்குவார். அங்கேயே இறக்கி விடுங்கள்' என்றார். அதன் பிறகே பரிசோதகர் அமைதியானார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us