ADDED : ஆக 03, 2026 01:29 PM
எந்த செயலைச் செய்தாலும் அலட்சியம் கூடாது. ஆனால் அப்படிப்பட்ட ஒரு செயல் கோடிக்கணக்கான உயிர்களை இன்று காப்பாற்றிக் கொண்டிருக்கிறது என்றால் நம்புவீர்களா...
அலெக்சாண்டர் பிளெமிங்கின் வாழ்வில் நடந்த சம்பவம் இது. இவரே பென்சிலினை கண்டுபிடித்தார். அதன் மூலம் இரண்டாம் உலகப்போரில் லட்சக்கணக்கான வீரர்கள் காப்பாற்றப்பட்டனர். அலட்சியத்திற்கும், இதற்கும் என்ன தொடர்பு என நினைக்கிறீர்களா... படியுங்கள் புரியும்.
1928ல் லண்டனில் உள்ள ஆய்வகத்தில் பாக்டீரியாக்கள் வளர்க்கப்பட்ட தட்டுகளை அப்படியே போட்டு விட்டு பிளெம்மிங் வெளியூர் புறப்பட்டார். ஒரு வாரம் கழித்து மீண்டும் ஆய்வகத்திற்கு வந்தார். அப்போது ஒரு தட்டில் பூஞ்சை வளர்ந்திருப்பதையும், அதைச் சுற்றி இருந்த பாக்டீரியாக்கள் அழிந்திருப்பதையும் கண்டார்.
அந்த பூஞ்சையில் இருந்து அவர் கண்டுபிடித்த மருந்து தான் பென்சிலின். எல்லாம் நன்மைக்கே என்பதற்கு இந்த நிகழ்ச்சி உதாரணம்.
