ADDED : ஆக 03, 2026 01:30 PM

அ நிறம் | அளவு
பாதிரியார் ஒருவரை சந்தித்த இளம்பெண், ''எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. எனக்காக திருமண முயற்சி எடுக்க யாருமில்லை'' என சொல்லி அழுதாள்.
''அப்படி சொல்லாதே. 'எனக்காக யாவையும் செய்து முடிப்பார்' என்ற வசனத்தை நீ கேட்டதில்லையா?'' எனக் கேட்டு விட்டு அதை பைபிளில் படித்தும் காட்டினார்.
தினமும் காலையில் எழுந்ததும், ''எனக்காக யாவையும் செய்து முடிக்கும் கர்த்தருக்கு வணக்கமும் நன்றியும் எனச் சொல்லி பழகு'' என்றார் பாதிரியார். அவளும் செய்வதாக சொல்லி புறப்பட்டாள்.
மூன்றே மாதத்தில் திருமண அழைப்பிதழுடன் பாதிரியாரைக் காண வந்த அவள், 'உண்மையாகவே எனக்காக யாவையும் செய்து முடித்தார். அவருக்கு என் வணக்கமும் நன்றியும்' என மகிழ்ந்தாள்.
