தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கதைகள்/அலட்சியம் வேண்டாம்

அலட்சியம் வேண்டாம்

அலட்சியம் வேண்டாம்


ADDED : ஆக 13, 2026 08:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 08:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விவசாயியான ஜோசுவா பாடுபட்டு தன் மகன் வில்சனை படிக்க வைத்தார். அவனும் அரசு அதிகாரியாக சேர்ந்தான்.

ஒரு மாதம் கழிந்த பின் மகனைப் பார்க்கச் சென்றார் விவசாயி.

அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வில்சன் மீட்டிங்கில் இருப்பதைக் கண்டார். விவசாயியின் மனம் குளிர்ந்தது. அப்போது அங்கு வந்த ஊழியர் ஒருவர், ''இன்னைக்கு மீட்டிங் நடப்பதால் மனு கொடுக்க முடியாது.

இடத்தை காலி செய்யுங்கள்'' என அலட்சியமாகச் சொன்னார். இதற்கு காரணம் விவசாயியின் தோற்றம் தான்! இதை கவனித்த அதிகாரி, ''இவர் என்னோட அப்பா, இப்படியா செய்வீர்கள்... வயசுக்காவது மரியாதை தரக் கூடாதா... தோற்றத்தை வைத்து யாரையும் எடை போடாதீர்கள்'' என்றார். அந்த ஊழியரும் தலை குனிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us