ADDED : ஆக 13, 2026 08:32 AM
அ நிறம் | அளவு
தன்னிடம் சீடராக சேர விரும்புவோரிடம், தத்துவ ஞானி சாக்ரடீஸ் சோதனை ஒன்றை வைப்பார்.
நீர் நிறைந்த குளத்திற்கு அழைத்துச் சென்று, ''இந்த குளத்தில் என்ன பார்க்கிறாய்?'' எனக் கேட்டே முடிவு செய்வார். ஏன் இப்படி கேட்கிறீர்கள் என சாக்ரடீஸிடம் கேட்டதற்கு, ''இந்த கேள்விக்கு பலரும் இரண்டு விதமாக பதில் சொல்வார்கள். சிலர், 'என் நிழல் குளத்தில் தெரிகிறது' என்பார்கள்.
சுயநலவாதியான இவர்கள், தங்களைப் பற்றி மட்டும் சிந்திப்பதால் யாருக்கும் பயன் இல்லை. இன்னும் சிலரோ, 'குளத்தில் மீன்கள் நீந்துகின்றன. நீருக்கடியில் செடிகள் உள்ளன' என்பார்கள். குளத்தில் தெரியும் மற்றதை கவனிப்பவர்களை சீடராக ஏற்கிறேன். ஏனெனில் இவர்கள் பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள்'' என்றார்.
