ADDED : ஆக 20, 2026 11:25 AM

அ நிறம் | அளவு
மைக்கேலின் டீ கடையில் மாஸ்டராக வருபவர்கள் ஒரு வாரம் கூட வேலையில் நீடிப்பதில்லை. இதை தன் நண்பர் ஜானிடம் சொல்லி வருத்தப்பட்டார். அதற்கு அவர், 'ஒருநாள் பொறு. முடிவு சொல்கிறேன்' என்றார் ஜான்.
'உன் கடைக்கு எதிரே இருக்கும் டாஸ்மாக்கிற்கு வருபவர்கள் உன் கடையில் தொந்தரவு செய்கின்றனர். நீ பயில்வான் ஒருவனை டீ மாஸ்டராக அமர்த்து.
அவருக்கு டீ தயாரிப்பதை சொல்லிக் கொடு. பிரச்னை அத்துடன் முடிந்து விடும்' என்றார். அப்போது தான் மைக்கேலுக்கு உண்மை புரிந்தது.
எப்போதும் ஒரு விஷயத்தை அணுகும் போது ஏன், எதற்கு, எப்படி கேட்டால் தீர்வு கிடைக்கும்.
