ADDED : ஆக 20, 2026 11:39 AM
அ நிறம் | அளவு
அமெரிக்க எழுத்தாளர் ராபர்ட் ரிப்ளி எழுதிய புத்தகம் 'நம்பினால் நம்புங்கள்' (பிலீவ் இட் ஆர் நாட்). அதில் 'சம்பாதிப்பது எப்படி' என்பதை சுவையாகச் சொல்லி இருக்கிறார்.
நான்கு நபர்கள் ஆளுக்கு ஒரு இரும்புத் துண்டு வாங்கினர். ஒரு துண்டின் விலை ரூபாய் 250. அவர்களில் முதல் நபர் அதை சொந்த பயன்பாட்டிற்கு உபயோகித்தார். இரண்டாது நபர் அதை குதிரை லாடம் செய்து 2,500 ரூபாய்க்கு விற்றார். மூன்றாவது நபர் தையல் மிஷினுக்கு பயன்படுத்தும் ஊசிகள் செய்து ஒரு லட்சத்திற்கு விற்றார். நான்காவது நபர் இயந்திர ஸ்பிரிங் செய்து இரண்டு லட்சம் சம்பாதித்தார்.
ஆக, விஷயம் ஒன்று தான். அதை நாம் எப்படி மாற்றுகிறோமோ அதை பொறுத்து தான் லாபம் என்கிறார் ராபர்ட் ரிப்ளி.
